அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்த வந்தேறி தெலுங்கர்கள் சிலர் தங்களைத் தமிழர்கள் என்கிறார்கள் என நடிகை கஸ்தூரி பேசியது திராவிட ஊடகங்களின் வழக்கமான பொய்களால் சர்ச்சை ஆனது.
மன்னர்கள் காலத்தில் அரண்மனைப் பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள் என்றும், அப்படி வந்தவர்கள் எல்லாம் இப்போது தங்களைத் தமிழர்கள் என்று கூறிக் கொள்வதாகவும் அவர் பேசினார் என ஊடகங்களில் செய்திகள் பரபரப்பாக ஒளிபரப்பப் பட்டன. இது ஆந்திரத்தில் பரவலாக செய்தியாகவும் திராவிட மீடியாக்களால் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், இது பொய். நான் சொன்னது என்ன, நீங்கள் திரித்து போட்ட தலைப்பு என்ன? தமிழகத்தில் வந்தேறி தெலுங்கர் சிலர் தமிழினம் என்று சொல்லிக்கொண்டு பிராமணரை தமிழரில்லை என்கிறார்கள் . உங்கள் மீது மரியாதை வைத்துள்ளேன். நேர்மையாக செய்தி அளிப்பது உங்கள் கடமை. ஊடகதர்மத்தை மறவாதீர்… என்று கஸ்தூரி தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார்.
நவ. 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களான பிராமணர்களின் குரலை எதிரொலிக்கும் வகையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பல்வேறு சமூகத் தலைவர்களும் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமூக சேவகியும் நடிகையுமான கஸ்தூரி உரையாற்றினார். அப்போது அவர், “சில வருடங்களுக்கு முன் ஒரு மன்னனின் அந்தப்புரப் பெண்களுக்குப் பணிவிடை செய்ய வந்த தெலுங்கர்கள் சிலர், இப்போது தங்களைத் தமிழ் இனம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள், இங்குள்ள பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல என்ன தகுதி உள்ளது? அப்படிச் சொல்வதற்கு நீங்கள் யார்..?’ என்று திராவிடக் கோட்பாட்டாளர்களைக் குறித்துக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.
தற்போதைய தமிழக அமைச்சரவையில் தெலுங்கு பேசும் அமைச்சர்கள் 5 பேர் உள்ளனர். தொல்.திருமாவளவன், ‘ஆட்சியில் அங்கம் வகிக்க வேண்டும், அதிகாரத்தில் பங்கு கொள்ள வேண்டும்’ என புதிய முழக்கத்தை கொண்டு வந்துள்ளார். ஆனால், தெலுங்கு பேசும் மக்களுக்கு இதுவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படவில்லை. ஹிந்து சனாதன தர்ம ரக்ஷணத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் கஸ்தூரி.
பிறர் சொத்தை அபகரிக்காதே, பிறர் மனைவியை ஏமாற்றாதே, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை கொள்ளாதே என்பார்கள் பிராமணர்கள். அதனால்தான் அவர்களுக்கு எதிராக தமிழகம் ‘பிரசாரம்’ செய்கிறது என்று திராவிட இயக்கத் தலைவர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு சாடினார் கஸ்தூரி.
இந்நிலையில், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் வந்து குடியேறிய தெலுங்கர்களை கஸ்தூரி அவதூறாகப் பேசியதாக திராவிட ஊடகங்கள் செய்தியைத் திரித்து கஸ்தூரிக்கு எதிராக ஒற்றைத் தாக்குதலில் ஈடுபட்டன. இதை அடுத்து, தெலுங்கர்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். திமுக.,வுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டிய பாஜக.,வினர், திராவிட ஊடகங்களின் அரசியலுக்கு வளைந்து கொடுத்து கஸ்தூரியை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்கள்.
இத்தகைய சூழலில், தெலுங்கு மக்களை தவறாக பேசியதாக தி.மு.க., பொய் பிரசாரம் செய்வதாக சரமாரியாக விளாசினார் கஸ்தூரி.தெலுங்கு மக்களை தவறாக பேசவில்லை. ஆனால் அப்படி பேசியதாக தி.மு.க., ஐ.டி., விங் பொய் பிரசாரம் செய்கிறது என அவர் செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டினார்.
சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விளக்குவதாகக் குறிப்பிட்ட கஸ்தூரி, செய்தியாளர்களிடம் பேசிய போது…
பொய்யை ஆயிரம் தடவை சொல்லியே எல்லாரையும் காலி செய்வது தி.க., நீதிக்கட்சி, தி.மு.க.,வின் திராவிட மாடல் நிலைப்பாடு. பல பொய்களை அவர்கள் பேசியும் நான் அசரவில்லை. நான் தமிழச்சியாக இருந்தாலும் இன்றைக்கு எனது பிழைப்பும், வரவேற்பும், வெற்றியும் தெலுங்கு மக்கள் தான் கொடுத்துள்ளனர். நான் ஒரு தெலுங்கு வீட்டு மருமகள் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நான் கூறியதில் தெலுங்கு இன மக்களுக்கு விரோதமான எந்த கூற்று இருக்கிறது? தெலுங்கு மக்களை பற்றி நான் எதுவும் கூறவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும், தீயசக்திகளை சொன்னால், அதை தெலுங்கு மக்களை நோக்கி சொன்னேன் என்று திசை திருப்பியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். தெலுங்கு இனத்தையோ, தெலுங்கு மக்களையோ நான் தவறாக கூறவில்லை.
பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று யார் குறிப்பிட்டார்களோ வீட்டில் தெலுங்கு பேசிவிட்டு வெளியில் தமிழில் பேசுகிறார்களோ, அவர்களை தான் அப்படி குறிப்பிட்டேன். ஈ.வே.ரா.வில் இருந்து ஆரம்பித்து வீட்டில் தெலுங்கு பேசிக் கொண்டு, வெளியில் வந்து நான் தான் தமிழர் என்று சொல்கிறார்களே அவர்களைத் தான் கூறினேன்.
தெலுங்கு பேசும் மக்களில் இருவகை உண்டு. ஒன்று என்னுடைய குடும்பத்தை போல. இன்னொன்று, தெலுங்கை வீட்டில் பேசி விட்டு, வெளியில் வந்து தமிழினம் என்று முழக்கத்தை வைத்துவிட்டு தமிழர்கள் ஓட்டுகளை வாங்கி, ஏமாற்றி பின்னர் ஓட்டு போட்டவர்களை தமிழர்களே இல்லை என்று ஒதுக்கி வைக்கும் அந்த இனத்தை தான் நான் சொன்னேன். நான் தெலுங்கு மக்களை பற்றி தவறாக பேசவில்லை.
தெலுங்கு மக்கள், அவர்களுக்கு எதிராக நான் பேசியதாக அப்பட்டமாக 100 சதவீத திராவிடிய பொய்யை யாரும் நம்ப வேண்டாம். எத்தனையோ திராவிடிய பொய்களில் இதுவும் ஒன்று. எப்பவும் உண்மை காலால் நடந்து போவதற்குள் பொய், இறக்கை கட்டி மூன்று முறை உலகத்தை சுற்றி வந்துவிடும். நான் ஒரு பிராமண பெண் என்பதால் இப்படிப்பட்ட வித, விதமான பொய்களை கூறி வந்தனர். தி.மு.க., ஐ.டி., விங் பொய் பிரசாரம் செய்கின்றனர். என்னை பற்றி அவதூறாக பேசி வந்தனர். எனக்கு யாரிடமும் இருந்து சர்டிபிகேட் தேவையில்லை.
எந்த மொழி பேசினாலும் தமிழர்கள் நலனுக்காக உழைப்பவர்களை என் தமிழர்கள் என்று நான் ஒத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் இங்கு ஆட்சி செய்யும் தி.மு.க.,வும், அவர்களுக்கு பின்புலமாக இருக்கும் தி.க., நாத்திக இயக்கங்களும் தயாராக இல்லை. வீட்டில் சாமி கும்பிட்டு, யாகம் வளர்த்துவிட்டு வெளியில் வந்து நாத்திகம் பேசுகின்றனர் தி.மு.க., தி.க.,காரர்கள்.
கடைசியில் தெலுங்கு மக்களுக்கு நான் அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி விட்டேன். அங்கு எனது கொடி நன்றாக பறக்கிறது என்று தெரிந்து, சனாதன எதிர்ப்பை கடைபிடிக்கும் இவர்கள், லட்டு, வெங்கடேஸ்வர சுவாமியை கிண்டல் செய்தவர்கள், நேற்று வரை எங்களை அசிங்கப்படுத்தியவர்கள், இன்று திடீரென தெலுங்கு மக்கள் மீது என்ன அக்கறை வந்துவிட்டது.
தமிழக அரசியலுடன் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தை ஏன் தெலுங்கானா, ஆந்திராவில் விளம்பரப்படுத்த வேண்டும். எனது குடும்பம் ஹைதராபாதில் இருக்கிறது, அடிக்கடி நான் அங்கு சென்று வருவதால் தான் இப்படி செய்கின்றனர். எனக்கு தெரிந்து பல பிராமணர்கள் கடும் கஷ்டத்தில் இருக்கின்றனர். இங்கு சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரின் சம்பளத்தை சேர்த்தாலும் முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்புக்கு ஈடாகுமா? உதயநிதி நடத்திய கார் ரேஸ் பட்ஜெட்டுக்கு ஆகுமா இங்கு உள்ளவர்களின் சம்பளம்.
பிராமணர்கள் மற்றவர்களை ஒடுக்கினார்கள் என்று கூறுவது முற்றிலும் பொய். நான் பேசியதற்கு கோர்ட்டில் வழக்கு தொடரவே முடியாது. நான் தெலுங்கு மக்களையோ, எந்த ஒரு தனிப்பட்ட நபரை பற்றியோ குறிப்பிட்டு சொல்லவில்லை. தி.மு.க., என்ற வார்த்தைக்கு என்மீது கேஸ் போடமுடியாது. ஏன் என்றால் அது சாதி கிடையாது. அது ஒரு சித்தாந்தம். நான் சொன்னது அனைத்தும் உண்மை. உண்மையில் இருந்து பின்வாங்க போவது இல்லை. ஆனால் நான் சொல்லாததை வெளியில் சொல்லி உள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா மக்களையோ நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை எப்படி மதிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். தெலுங்கு மக்கள் எந்தளவுக்கு என் மீது அன்பு செலுத்துகின்றனர் என்பதும் எனக்கு தெரியும்.
நான் யாரை பற்றி சொன்னேன் என்று உலகத்துக்கே தெரியும். அதனால் தான் இந்தளவுக்கு பிரசாரம் செய்கின்றனர். மேடையிலும் நான் யார் பேரையும் சொல்லவில்லை. பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்று சித்தாந்தம் கூறும் யாராக இருந்தாலும் அவர்களை என் உயிர்மூச்சு உள்ளவரை எதிர்ப்பேன். பிராமண வெறுப்பு, கடவுள் மறுப்பு, சனாதன ஒழிப்பு இது எல்லாம் தான் திராவிடியம். இந்த வார்த்தை எப்படி ஆபாசமாகும்.
திராவிடியம் என்பது கொச்சையான, பொய்யை மூலதனமாக வைத்த, சனாதன எதிர்ப்பை காட்டி, ஊராரை ஏமாற்றி பிழைக்கிற கொச்சையான சித்தாந்தம். அந்த சித்தாந்தமே ஆபாசம்…. என்று குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்களில் கஸ்தூரிக்கு எதிராகஅறுவறுப்பான வகையில் ஆபாச எதிர்ப்புகளை கழகக் கண்மணிகள் கட்டமைத்தாலும், கஸ்தூரியின் கருத்துக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
அன்று ஒருவர் பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த போது, என்னை மீறி பிராமணர் பூணூல் மேல் கை வைத்துப் பார் என பிராமணர்களுக்கு அரணாக இருந்தவர் பசும்பொன் தேவர் ஐயா.. ஐயா பசும்பொன் தேவர் வழிவந்த தமிழ் சமூகம் இன்று @KasthuriShankar அவர்களுக்கு அரணாக இருக்கும்…