2019ல் … டிரெண்டிங் சிந்தனைகள்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்
maxresdefault - 2026

அறிவுஜீவித்தனம் என்பது தரவுகள், ஆவணங்களின் அடிப்படையில் அல்லாது மீம்ஸ் அடிப்படையில் யோசிப்பது, விவாதிப்பது.

நடுநிலை என்பது தனது மத அடையாளம் தெரியாதவாறு பெயரை மாற்றிக் கொண்டு தனக்கு தெரியாத, பிற மத அடையாளங்களை நம்பிக்கைகளை, இழிவாக பேசுவது.

மனித உரிமை என்பது இறந்த / பாதிக்கப் பட்டவரின் சாதி, மதத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பென்பது நியூட்ரினோ, கூடங்குளம், இணையத்தை எதிர்த்துக் கொண்டு ஆற்றில், கடற்கரையில் மணல் அள்ளுவது.

சமூகநீதியென்பது திறமையையும் அறிவையும் ஒதுக்கி தள்ளிவிட்டு தகுதியுடையோர்வாய்ப்புக்களைத் தட்டிப்பறிப்பது.

பகுத்தறிவென்பது கேக் தின்று, கஞ்சி குடித்துவிட்டு கொழுக்கட்டையை பழிப்பது.

மதச்சார்பின்மை என்பது இந்துமத கடவுளர்களை, ஆச்சார்யர்களை, நம்பிக்கைகளை, சடங்குகளை, மட்டுமே இழிவுபடுத்துவது.

பெண்ணுரிமை என்பது சபரிமலைக்கு போவேன் என்று அடம்பிடித்துவிட்டு கற்பழிப்பு புகார் பஞ்சாயத்துக்கு துணை போவது.

ஈழத்தமிழர் வாழ்வாதாரம் என்பது வேறெந்த போராட்டங்களும் நடத்தாதபோது நினைவுக்கு வருவது.

விவசாயம் என்பது தலைநகர் டெல்லியில் எலும்புக்கூடு, மண்டை ஓடுகளுடன் அரை/முழு நிர்வாணமாக டிவி சானல் காமிராக்கள் முன் நடுரோட்டில் நடத்தப்படுவது.

  • மு.ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.