மினி சட்டமன்றத் தேர்தல் நடத்த ஸ்டாலின் கோரிக்கை!

சற்றுமுன் சென்னை தமிழகம்
stalin out assembly2 - 2026

திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில், அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்!

புயல் நிவாரணத்துக்காக திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பை வரவேற்றிருக்கும் முக ஸ்டாலின், தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அனைத்துக் கட்சிகள் & பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதற்கு இணங்க திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதை அனைவரும் வரவேற்பார்கள். நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து ‘மினி சட்டமன்றத் தேர்தல்’ என்று சொல்லுமளவுக்கு 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட வேண்டும்! என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.