இட ஒதுக்கீட்டு மசோதா… சமூகநீதிக்கு வெற்றி! மோடி பெருமிதம்!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன்
modi mankibaat - 2026

புதுடில்லி : இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இட ஒதுக்கீடு மசோதா மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதை காணும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.

விவாதத்தின் போது எம்.பி.,க்கள் தங்கள் புத்திசாலித்தனமான கருத்துகளை வெளிப்படுத்தினர். மசோதா நிறைவேறியது சமூகநீதிக்கு கிடைத்த பெரும் வெற்றி.

இது இளைஞர்கள் தங்களது வலிமையை வெளிப்படுத்தவும், இந்தியாவின் மாற்றத்திற்கு பங்களிக்கவும் உத்வேகமாக அமையும்.

வலுவான இந்தியாவை உருவாக்க நினைத்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நன்றி… என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது! இது மோடிக்குக் கிடைத்த வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.