modi - 2026

இந்திய பிரதமர் மோடியின் வாழ்கை வரலாற்றை விளக்கும் வகையில் பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய், பிரதமர் மோடியாக நடித்துள்ள இந்த படத்தை ஓமங்க் குமார் இயக்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்கள் வரும் 18ம் தேதி நடக்க உள்ள நிலையில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தன. இதை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் படத்தை வெளியிட தடையில்லை என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இன்று இந்த படம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், வரும் 11ம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த படம் 38 நாடுகளில் சுமார் 1700 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. மேலும் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உட்பட 23 மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த படத்தை வெளியிடுவதற்கான தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தற்போதும் உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து படம் வெளியிட்டு தேதியில் மாற்றம் உண்டாகலாம் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending