கால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
RYDE Sneha 4 - 2026

‘ரைட்’ Ryde என்ற கால்டாக்ஸி நிறுவனத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நடிகை சினேகா பேசியபோது, “இன்று கால் டாக்ஸி சேவைகள் புதிது புதிதாக வருகின்றன! ஆனால் ஓட்டுனர்கள் சிலரால் பயணிகள் பலரும் பலவிதமாக அவதிக்குள்ளாகி சங்கடப்பட்ட நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.

எனது கணவர் பிரசன்னா கூட, இதுபோன்ற கால் டாக்ஸி சேவை தாமதத்தாலும் ஓட்டுனரின் அலட்சியத்தாலும் பாதிக்கப்பட்ட நிகழ்வு நிறைய உண்டு.

இன்று பல கால் டாக்சி நிறுவனங்கள் தங்கள் சேவையை பயன்படுத்தும் பெண்களுக்கு அவர்களின் பயண பாதுகாப்பு குறித்து பெரிய அளவில் அக்கறை காட்டுவதில்லை. இது ஒரு பெரிய குறையாக இருக்கிறது… என்று வருத்தம் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.