கால்டாக்சி டிரைவரின் கதைதான் ‘வீரசிவாஜி’

சினி நியூஸ்

ரோமியோ ஜூலிட் வெற்றிப் படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் “வீரசிவாஜி”.

இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குநர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு எம்.சுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

படம் பற்றி இயக்குநர் கணேஷ் வினாயக்கிடம் கேட்டதற்கு, இது ஆக்ஷன் கலந்த பேமிலி எண்டர்டைன்மென்ட் சப்ஜெக்ட். கதாநாயகன் சிவாஜி ஒரு கால்டாக்சி டிரைவர். பாண்டிச்சேரியிலிருந்து கன்னியாகுமரி வரையிலான ஒரு பயணத்தின் போது நடக்கும் பரபரப்பான சம்பவம் தான் திரைக்கதை. படத்தின் பெரும்பகுதி பாண்டிச்சேரியில் நடைபெற்று விட்டது. பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது என்றார் இயக்குநர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.