நம்பாதீங்க! நம்பாதீங்க! யாரும் வதந்தியை நம்பாதீங்க ! : நாஞ்சில் சம்பத்

Published:

 
அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளராக நாஞ்சில் சம்பத் ஏற்கனவே பல வருடங்களாக பதவி வகித்து வந்தார்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்ய பட்டுள்ளதாக அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார்.
 
 
கடந்த சில தினங்களாக விரைவில் நாஞ்சில் சம்பத் தி.மு.க வில் இணைய போவதாக சமூக ஊடகங்களில் தகவல் வைரலாக பரவிவருகிறது .
 
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் என்னை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் எனும் தலைப்பில் அவரது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அந்த பதிவில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளதாவது :-.
 
நான் அதிமுக வில் தான் நீடிக்கிறேன் .மருத்துவர்களால் கைவிடப்பட்ட வயதான தந்தையையும் ,இரண்டு கண் பார்வையும் குறைந்து போன தாயாரையும்பரிபாலித்து கொண்டு கிராமத்து வீட்டில் இருக்கிறேன் .
 
வதந்தியை வாந்தி எடுக்கிறவர்களுக்கு நாஞ்சில் சம்பத்தை பகடைகாய்யாக்குவது பிள்ளை விளையாட்டு ,ஆக்கங்களுக்கு பயன்படவேண்டிய வலைத்தளங்கள் அழிவு வேலைக்கு பயன்படுத்துவது கவலைக்குறிய செய்தி என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img