ஜெயலலிதாவுடன் கூடவே இருந்து ‘சித்தி’யை வைத்து கொள்ளை அடித்தவர்: தினகரனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் அளித்த ‘பட்டம்’!

சற்றுமுன் தமிழகம் மதுரை
Dindigul seenivasan - 2026

ஜெயலலிதாவுடன் கூடவே இருந்து, சித்தியை வைத்து கொள்ளை அடித்த கூட்டம் அது என்று ஆவேசத்துடன் கூறினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

பழனியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், எங்களுக்கு திறமை இருப்பதால் ஒரே குதிரையில் இருவர் பயணிக்கின்றனர். தினகரன் அதிமுகவுக்காக எதுவும் செய்யவில்லை! தினகரனுக்கு சகிகலாவின் அக்கா மகன் என்ற தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லை!.

32 ஆண்டு காலமாக ஜெயலலிதாவுடன் இருந்து எந்தெந்த வழியில் எல்லாம் கொள்ளையடிக்க முடியுமே அந்த வழியில் எல்லாம் கொள்ளை அடித்த கூட்டம் தினகரன் குடும்பம்!

குறுக்குவழியில் சித்தியை வைத்து கொள்ளையடித்த தினகரன் தன்னை ஒரு பெரிய தலைவனைப் போல காட்டிக்கொண்டார்!.

கோடநாடு கொலை தொடர்பாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. கோடநாடு எஸ்டேட் சசிகலா குடும்பத்தினரிடம்தான் இருந்தது! கோடநாட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்த நிலையில் அவற்றை எடுக்க யார் ஆட்களை அனுப்பினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது பழி சுமத்தப்படுகிறது. இந்தப் பழியை சுமத்தும் நபர்கள் அனைவரும் பல குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள்!

பணத்துக்காக எதையும் செய்யும் கூட்டம்தான் இவர்களை வைத்து அவதூறு பரப்ப முயற்சி செய்கிறது… என்று ஆவேசமாகப் பேசினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.