ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட்… ஆனா காங்கிரஸை காப்பியடித்தது: ப.சிதம்பரம்

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் வணிகம்
cong modi govt - 2026

மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். அதற்கு விமர்சனங்கள் வலுத்டு வருகின்றன.

முன்னாள் மத்திய அமைச்சர் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தற்போது ஊழல் மற்றும் பண முறைகேடு விவகாரங்களில் சிக்கி, நாட்டின் உயர் அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டு வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார்.

உயர், உச்ச நீதிமன்றங்களின் தயவால் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ப.சிதம்பரம் இன்று ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு கருத்து, பரவலாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இடைக்கால பட்ஜெட் குறித்து அறிவித்துள்ள சில திட்டங்களை கிண்டல் செய்துதுள்ளார். ஏழைகளே முதலில் கவனிக்கப் பட வேண்டியவர்கள், விவசாயிகளே நாட்டின் முதல் சொத்து என்று நிதி அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டதை கிண்டல் செய்து, காங்கிரஸின் திட்டம் இது என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.

இது ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட் என்று குறிப்பிட்டுள்ள சிதம்பரம் இந்த பட்ஜெட்டின் முக்கிய விவரங்கள் காங்கிரசின் அறிவிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்

ஏழைகளே நாட்டின் முதல் சொத்து என்பதை கருத்தில் கொண்டு காங்கிரஸ் அறிவிப்புகளை செய்ய இருந்ததாகவும் அதனை ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட்டாக பியூஸ் கோயல் அறிவித்துள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்

ஆனால் உண்மையில் சிதம்பரம் பொய் சொல்லுகிறார் என்றும், கடந்த 2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவரும் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்களை குறிப்பிடும்போது இஸ்லாமியர்களே நாட்டில் முதலில் கவனிக்கப்படவேண்டியவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார் அடுத்து சிறுபான்மை ஆணையத்தின் பேசிய போது அவர் அரசு மற்றும் தனியார் வேலைகளில் சிறுபான்மையினருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்

ஆனால் சிதம்பரம் இஸ்லாமியர்களை தாஜா செய்வதையே காங்கிரசின் கொள்கை என்பதை மறைத்துவிட்டு ஏழைகளுக்கு ஆதரவானது என்று இப்போது காட்ட முயல்கிறார் என பல்வேறு கருத்துகள் விமர்சனங்கள் எழுந்துள்ளன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.