இ- பெர்மிட், இ-பாஸ் தேவை இல்லை! மத்திய அரசு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
bus lorry traffic

மாநிலங்களுக்குள்ளும், ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வது குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால், பல மாநிலங்களில் ஊரடங்கு இன்றளவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, போக்குவரத்து வசதி பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில்,

கட்டாயம் இ பாஸ் உள்ளிட்டவற்றை பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது.

இந்நிலையில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். ஆனால் வந்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், மாநிலத்திற்குள்ளோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ- பெர்மிட் அல்லது இ பாஸ் உள்ளிட்டவற்றை பெறத் தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.