செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் துவக்கம்! மத்திய அரசு!

Published:

metro

செப். 7- ம் தேதி முதல் மெட்ரோ ரயில்களுக்கான சேவை தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது.

தற்பொழுது 3 -ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது வருகின்ற 31- ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை செப்30- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

அதில் மெட்ரோ ரயில் சேவை செப். 7- ம் தேதி முதல் தொடங்கும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Related articles

Recent articles

spot_img