- முனைவர் கு.வை.பா
இன்று, 10 நவம்பர் 2021 அன்று மாலை 1730 மணிக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி (Low Pressure Area) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression) வலுப்பெற்றிருக்கிறது. இது சென்னையிலிருந்து கிழக்கு-தென் கிழக்கு திசையில் 430 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை 11.11.2021 மாலை காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே பாண்டிச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று இரவு வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களிலும், தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களிலும், ராயலசீமா பகுதியிலும் லேசான முதல் மிதமான மழை அனைத்து இடங்களிலும் பெய்யும்.
ஒரு சில இடங்களில் கனத்த முதல் மிக கனத்த மழை பெய்யும். ஓரிரு இடங்களில் அதி கனத்த மழை பெய்யும்.
இன்று காலை 0830 மணியிலிருந்து இரவு 1930 வரை பெய்துள்ள குறிப்பிடத்தகுந்த மழையளவுகள் (மில்லிமீட்டரில்) – சென்னை நுங்கம்பாக்கம் 36, எண்ணூர் 47, மீனம்பாக்கம் 21, செய்யூர் 38, அண்ணா பல்கலைக்கழகம் 28, எம்.ஆர்.சி நகர் 29, தரமணி 25.5, வில்லிவாக்கம் 27.5
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகிஉள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே தென்கிழக்கில் 430 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மாமல்லபுரம் ஸ்ரீஹரிஹோட்டா இடையே நாளை காலை கரையை கடக்கும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அதிகமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் அருகே உள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்யும்.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது நாளை மாலை வட தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.