ஆசையான சப்பாத்திக்கு டிஷ் தோசைக்காய் பருப்பு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Dosa lentils
Dosa lentils

தோசைக்காய் பருப்பு
தேவையானவை:
தோல், விதை நீக்கி நறுக்கிய தோசைக்காய் (சிறிய முலாம்பழம்போல் மஞ்சள் நிறத்தில் விதையுடன் இருக்கும்) – ஒரு கப்,
வேகவைத்த துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 4 (துண்டுகளாக்கவும்)
, கீறிய சிறிய பச்சை மிளகாய் – 6, மஞ்சள்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – சிறிதளவு.
தாளிக்க:
கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:
தாளிக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் தாளித்து, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளித் துண்டுகள், தோசைக்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு நீர், வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.
இது… சாதம், சப்பாத்திக்கு சரியான ஜோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.