
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்தது!
- தமிழகத்தில், கொரோனாவால் மொத்த பாதிப்பு 19,372
- ஆண்கள் – 12,219 | பெண்கள் – 7,148 | திருநங்கை – 5
- குணமடைந்தவர்கள் – 10,548
- சிகிச்சையில் உள்ளவர்கள் – 8,676
- உயிரிழப்பு – 145
- மொத்த பரிசோதனைகள் – 4,55,216
- இன்றைய பரிசோதனை – 12,246
தமிழகத்தில் மே-28 இன்று 827 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 19,372 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் இதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய போது…
தமிழகத்தில் இன்று மேலும் 827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 70 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், 20 பேர் கர்நாடகாவில் இருந்தும் வந்தவர்கள். மொத்த பாதிப்பு 19,372 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக உள்ளது. 639 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 8,824 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 70 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 12,246 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 4,55,216 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 55.54 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்றார்.
மேலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 7 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்!