‘ரீ-கவுண்டிங்’ சிதம்பரம் அக்கவுண்ட் பத்தி பேசலாமா?

அடடே... அப்படியா? சற்றுமுன் துணுக்குகள் நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
14 June11 P Chidambaram 1 - 2026

பிப்.1 வெள்ளிக்கிழமை மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. உடனே பலவிட கருத்துகள் பட்ஜெட் குறித்து பகிரப் பட்டன.

அரசியல்வாதிகள் பலரும் பட்ஜெட் பற்றி கருத்து கூறியிருந்தாலும், முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில், ப.சிதம்பரத்தின் கருத்தை வடநாட்டு, தென்னாட்டு ஊடகங்கள் எல்லாம் பொறுப்புடன் கவனித்தன.

பட்ஜெட் உரை நிகழ்ந்து கொண்டிருந்த போதே, ஓரிரண்டு டிவிட்களை ப.சிதம்பரம் பதிவு செய்தார். அதில் ஒரு டிவிட்டில், வாக்குகளைப் பெறுவதற்கான கணக்கு இது என்று பொருள்படும் வகையில் பதிவிட்டார். தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது கருத்து வட நாட்டு ஊடகங்களில் எடுத்தாளப் பட்டன. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சிலர், ப.சிதம்பரத்தின் அரசியல் வாழ்வின் பின்னணி தெரிந்தவர்கள் என்ற வகையில், சில கருத்துகளை கிண்டலாகப் பதிவு செய்தனர்.

pc votecount - 2026

அதில் ஒருவர், இதை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? உங்கள் தேர்தல் வெற்றி அப்போது வாக்கு எண்ணிக்கையில் அல்ல, வாக்கு மறு எண்ணிக்கையில் அமைந்திருந்தது. மேலும், உங்கள் ஜாமீன் மனுக்களையும் மக்கள் எண்ணிக் கொண்டு வருகிறார்கள் என்று கிண்டல் செய்திருந்தார்.

அக்கௌண்ட் ஆஃப் வோட், வோட் ஆஃப் அக்கௌண்ட் என்று ப.சிதம்பரம் வார்த்தை மாய்மாலம் செய்ய, கௌண்டிங் ரீகௌண்டிங் என்று அதே வார்த்தை மாயாஜாலத்தை டிவிட்டர் வாசிகளும் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.