என் சூழ்நிலை தெரியாம நீங்களா தீர்மானிக்காதீங்க: அர்ரஹ்மான் மகள் ஆவேசம்!

புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
AR Rahman Daughter Speech About her Father - 2026

எந்த உடை அணிவது என்பது என் முடிவு என்று அர்ரஹ்மான் மீதான விமர்சனங்களுக்கு மகள் கதிஜா பதிலடி கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் அர்ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஹ்மானின் மகள் கதிஜா, ‘கடந்த 10 வருடங்களில் நீங்கள், எங்களுடன் செலவிடும் நேரம் குறைந்துள்ளதே தவிர, உங்களிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை’ என்று கூறினார். மேலும், ‘ஆஸ்கர் விருது உங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் நிறைய சமூக சேவை செய்கிறீர்கள். இது, உங்களிடம் நான் அதிகம் போற்றும் ஒரு குணம்’ என்றும் உணர்ச்சிப் பூர்வமாக பேசினார். 

ஆனால் ரஹ்மானின் மகள் வெளிப்படுத்திய வார்த்தைகளும் தோற்றமும் பலரது புருவங்களையும் உயர்த்தியது. இஸ்லாமிய அரபு நாடுகளின் உடையை இந்திய சூழலில் மேடையில் அணிந்து வந்ததை பலரும் விமர்சனம் செய்தனர். இதைப் போன்ற ஒரு தோற்றத்துடன் ஹிந்து ஆசாரத்தைப் பேணும் ஒருவரின் வீட்டுப் பெண் தங்களது பாரம்பரிய உடையிலோ, மொழியிலோ தன்னை வெளிப்படுத்தியிருந்தால்… இந்த சமூகமும் ஊடகங்களும் என்ன பாடு படுத்தியிருப்பார்களென்ற குரலை எழுப்பினர்!

இது குறித்து மனம் திறந்து கருத்தை தெரிவித்துள்ள கதிஜா, எனது தந்தையுடன் அண்மையில் நான் மேடையில் பேசிய விவரங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன! இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எதிர்பார்க்கவில்லை!

ஆனால், இத்தகைய சூழல் எனது தந்தையால் திணிக்கப்பட்டதாகவும் எனது தந்தை இரட்டை நிலைப்பாடு உடையவர் என்றும் கருத்துக்கள் உலா வருகின்றன! இது குறித்து சொல்ல வேண்டுமானால் இது என்னுடைய விருப்பம் என்று தான் சொல்ல வேண்டும்

என்னுடைய வாழ்க்கையில் எனது பெற்றோர்கள் எதையும் திணித்ததில்லை இது என்னுடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேர்வு! நான் வளர்ந்த பெண்! என் வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்ட வளர்ந்த பெண்

எந்த ஒரு மனிதனுக்கும் அவனோ அல்லது அவளோ அவர்கள் விரும்பியதை அணிந்துகொள்ள உரிமை இருக்கிறது! எனவே என்னுடைய உண்மையான சூழ்நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல் நீங்களாக ஒரு முடிவுக்கு வரவேண்டாம் என்று கதிஜா கூறியுள்ளார்!

இருப்பினும், அந்த உண்மையான சூழ்நிலைதான் உங்களை இப்படி மேடையில் தோன்றும்படி நிறுத்தியிருக்கிறது; அதற்காக நாங்கள் வருத்தப் படுகிறோம்! உங்கள் நிலையை எண்ணி வருந்துகிறோம்! என்று பதில் அளித்திருக்கின்றனர் சமூக வலைத்தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.