காலித்தனத்தை ஜனநாயகம் என்று சித்திரிப்பதுதான் திமுக! ஸ்டாலினுக்கு தமிழிசை சரமாரி கேள்விகள்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
tamilisai soundarrajan 1 - 2026
file pic:

திமுக., என்ற ‘ஜனநாயக’ இயக்கத்துக்கு தனது டிவிட்டர் பதிவுகளில் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்துள்ளார் பாஜக., தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

சேலம் பாஜக., அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டுவீட் பதிவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்!

அதில், பாஜக., அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழிசை ஆக.29 இன்று காலை வெளியிட்ட டுவீட்டர் பதிவுகளில்…

அடுத்தகட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா?இதுதான் சமூக செயல்பாடா?சமூகஅமைதி சீர்குலைப்பா?சமூகஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம்! இதையே @arivalayam அனுமதிக்குமா?

அன்று யாரோ எங்கேயோ பேசியதற்காக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தேடி வந்து வாசலில் இருந்த பெண் தொண்டர்களையும்,என்னையும் மற்றும் காவலர்களையும் காயப்படுத்தி தாக்கியது திமுக என்பது கடந்தகால வரலாறு… – என்று பதிவு செய்திருக்கிறார் தமிழிசை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.