மருத்துவமனையில் ரஜினி ! சகோதரர் நலம் !

Published:

rajini bro - 2026

ரஜினிகாந்த் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னையில் நடத்திய விழாவில் பங்கேற்று கிருஷ்ணரும் அர்ஜுனரும் என அமித்ஷாவையும்,மோடியையும் ஒப்பிட்டார்.அதன் பின் அது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. அரசியலுக்கு வருவது குறித்து தன் இல்லத்தில் வைத்து செய்தி வெளியிட்டார்.சினிமாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலாக நடித்து வருகிறார்.

rajini 2 1 - 2026

தர்பார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து யோகி பாபு, நிவேதா தாமஸ், நயன்தாரா, சுனில் ஷெட்டி, தம்பி ராமையா, ஸ்ரீமன், நவாப்ஷா, ப்ரதீப் பப்பர் ஆகியோர் பலர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த நிலையில், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால், படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாவது தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் தர்பார் படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது ரஜினி போலீஸ் உடையில் இருப்பது போன்று அருகில் நயன்தாரா நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. என்னதான் படப்பிடிப்பு பிஸியாக நடந்து வந்தாலும், தனது சகோதரரை சந்திக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கியுள்ளார்

rajini 2 - 2026

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், தன்னுடைய அண்ணன் சத்யநாராயணராவை ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்த ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அண்ணன் சத்யநாராயண ராவ் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் கொண்டவர்.

காரணம் தன்னை சிறு வயதில் இருந்தே வளர்த்து ஆளாக்கியவர். என்ன தான் இந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக தான் இருந்தாலும், தன்னுடைய அண்ணனுக்கு தம்பியாய் இருப்பார். அண்ணன் மீது அவ்வளவு மரியாதை.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

சமீபத்தில், பெங்களூரு சென்ற ரஜினிகாந்த் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது சகோதரர் சத்யநாராயண ராவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சகோதரரை சந்தித்து நலம் விசாரித்த போது அருகிலிருந்த மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதில், ஒரு புகைப்படத்தில், ரஜினிகாந்த், அவரது சகோதரர் சத்யநாராயண ராவ், மருத்துவமனை ஊழியர்கள் என்று அனைவரும் கட்டைவிரலை உயர்த்தி காட்டுகின்றனர். இது ரஜினியின் சகோதரர் நலமுடன் இருப்பதைக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img