‘தலித்’ பெயரில் வழங்கும் விருது வேண்டாம்..! திருமா மறுத்த இளைஞர்!

கல்வி சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல்
srm function dalit indian student speech - 2026

நான் தலித் அல்ல; இந்தியன் எங்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தாதீர்கள். கல்லூரி விழாவில் திருமாவளவன் முன்னிலையில் விருதை மறுத்தார் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் ஒருவர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் சிறந்த சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக நிறுவனர் பச்சைமுத்து, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஃபெரோஸ் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் ‘கோ -கோ’ விளையாட்டிற்கு மாற்று வடிவம் கொடுத்த இந்தியர் என்ற முறையில் இளைஞர் ஒருவருக்கு விருது அறிவிக்கப்பட்டது! அவரை விழாவில் அடையாளப்படுத்தும் போது, தலித் இளைஞர் என்று அழைத்தனர். இதனால் சற்று ஆவேசம் அடைந்த அவர், ‘முதலில் நான் ஒரு விவசாயி! நான் இந்தியன்!’ என்றார்! அவர் அப்படிச் சொன்ன போது, அரங்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் அதிர்ந்தனர்.

தொடர்ந்து, தன்னைப் போன்ற இளைஞர்களை பலர் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வதாகக் கூறிய அவர், ஒவ்வொருவரும் தலித் என்ற அடையாளத்தை தூக்கி எறிந்து விட்டு, இந்தியன் ஆக இணைந்தால் நிச்சயம் வாழ்க்கையில் சாதிக்கலாம் ! என்றார்.

சாதியை வைத்து அரசியல் செய்பவர்களை ஒதுக்கலாம் என்று சொல்ல கல்லூரி மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.

சாதி அடையாளங்களைத் துறந்து, சாதீய அரசியலை மறந்து விவசாயி என்றும், தமிழன் என்றும், இந்தியன் என்றும் ஒன்றுகூட வேண்டும் என்ற அந்த மாணவரின் மனப்போக்கு, திருமாவளவன் போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சவுக்கடி!

அந்த மாணவர் பேசியதன் வீடியோ பதிவு….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.