நாமக்கல்லில் தவறிவிழுந்து உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் அரசு நிதிஉதவி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி
namakkalarchaka - 2026

கடந்த மாதம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இறைப் பணியில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் வெங்கடேசன் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் திருக்கோவில் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி உதவி செய்யப் படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரில் வெளியான அறிக்கையில்,

நாமக்கல் மாவட்டம் அருள்மிகு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் கடந்த ஜனவரி 27 அன்று ஆலய கைங்கரிய பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்டம் கோட்டை பிரதான சாலையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் வெங்கடேசன் என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜனவரி 28 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்

கைங்கரிய பணியின் போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த வெங்கடேசன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த வெங்கடேசன் அவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு தினமாக அவருடைய குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் திருக்கோயில் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.