madurai mattuthavani bus stand
madurai mattuthavani bus stand

பஸ்கள் இயங்கி, இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையிலும், வெறிச்சோடிக் கிடக்கிறது, மாட்டுத் தாவணி பஸ்ஸ்டாண்ட்.

மதுரையில் கடைகள் திறக்கப்பட்டும், பஸ்கள் இயங்கினாலும், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக இன்னமும் பலர் வீட்டை விட்டு வெளியே வர அச்சப் படுகின்றனர்.

தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக வருவோரைத் தவிர, ஏனையோர் பஸ்களில் பயணம் செய்ய பஸ் நிலையம் வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், மதுரை நகரில் பல கடைகள் திறந்தாலும், பழைய மாதிரி வியாபாரமானது தொடங்க வில்லையாம்.

இதனால் மதுரை நகரில் சில பகுதிகளில் உள்ள வியாபாரிகள் பிற்பகலில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விடுகின்றனராம்.

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலைய வியாபாரிகள் சிலர் கூறியபோது, கடை வாடகை, மின்சாரக் கட்டணத்துக்கு கூட வியாபாரம் நடைபெறுவதில் மந்தமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

  • ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending