
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தென்காசியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 142 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில், 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 4 பேர் கீழப்பாவூரைச் சேர்ந்தவர்கள். 3 பேர் திரவிய நகரைச் சேர்ந்தவர்கள். 2 பேர் தேவிப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்.
செங்கோட்டை, கீழக்கலங்கல், லட்சுமிபட்டி, நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் ஆவர்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 6825 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 365 பேர் அரசு சார்பில் அமைக்கப்பட்ட முகாம்களிலும் மற்றவர்கள் வீட்டுத் தனிமையிலும் உள்ளனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.