சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு! 19 முதல் 30ம் தேதி வரை!

Published:

corona chennai
corona chennai

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்த வருடம் பிறப்பிக்கப்படுகிறது 

வரும் 19ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது! இந்த நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும் 

கொரோனா வைரஸ் தொற்று மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்திருந்தது 

இதையடுத்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் படுவதாக அரசு அறிவித்துள்ளது 

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அடுத்து சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும்.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

சென்னை பெருநகர காவல் மாவட்டத்தில் வரும் 19ந் தேதி முதல் வரும் 30ந் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும்… திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது! திருவள்ளூர் மாவட்டத்தின்  கும்மிடிப்பூண்டி , பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப் படும். 

செங்கல்பட்டு, மறைமலை நகர் நகராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது! செங்கல்பட்டு மாவட்டத்தின் நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும்  முழு ஊரடங்கு பிறப்பிக்கப் படுகிறது. அதுபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு  பிறப்பிக்கப் படுகிறது. 

  • 4 மாவட்டத்தில் அரிசி கார்டுதாரருக்கு தலா ரூ.1,000 நிவாரணம்
  • மதியம் 2 வரை காய்கறி கடை, பெட்ரோல் பங்க் செயல்படும்
  • ஆட்டோ, வாடகை வண்டிக்கு அனுமதி இல்லை
  • ரேஷன் கடை காலை 8 முதல் பிற்பகல் 2 வரை மட்டும் இயங்கும்
  • 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அமல்
  • சென்னை உட்பட 4 மாவட்டத்தில் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு
ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img