
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ளது பால்கர் என்ற கிராமம். இங்கு வசித்து வந்த ஒருவரது ஆடு காணாமல் போய்விட்டது.
ஆட்டை யார் திருடினார்கள் என்று கண்டுபிடிக்க தொடங்கினார்.. கடைசியில் 16 வயது சிறுவன்தான் ஆட்டை திருடியிருப்பதாக கருதி 3 பேர் சேர்ந்து சரமாரியாக அடித்துள்ளனர்.
சிறுவனின் டிரஸ்களை மொத்தமாக களைந்து நிர்வாணமாக்கி உள்ளனர். முகத்தில் கரியை எடுத்து பூசியுள்ளனர். பிறகு தலைமுடியையும் வெட்டி எடுத்துள்ளனர். இதெல்லாம் போதாது என்று அந்த ஆடு திருடியதற்காக 1 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார்கள்.
கொடுமைகள் ஒவ்வொன்றையும் தாங்க முடியாமல் சிறுவன் அழ ஆரம்பித்துவிட்டான். உடம்பெல்லாம் ரத்த காயங்கள். வீட்டுக்கு வந்து நடந்ததையெல்லாம் சொல்லி அழுதான். ரத்தம் வழிவதை பார்த்த பெற்றோர் பதறியடித்தபடி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தற்போது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
நடந்த சம்பவம் குறித்த அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று இளைஞரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தங்கள் மகன் அப்படி ஒரு காரியத்தை செய்யவே இல்லை, அந்த ஆடு யார் திருடியது என்றே தங்களது தெரியாது என்று சிறுவனின் பெற்றோர் கதறி அழுதபடி போலீசில் சொன்னார்கள். தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு ஆடு திருடியதற்காக நிர்வாணப்படுத்தி, தலைமுடியை வெட்டி, கரியை பூசி, அடித்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.



