இந்த வீடியோவ வைரலாக்குங்க… ப்ளீஸ் ப்ளீஸ்… ராணுவ வீரரின் கெஞ்சல்!

அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

video request viral - 2026

இணையத்தில் சில வீடியோக்கள் எக்குத்தப்பாக எகிறிவிடும். சில வீடியோக்கள் கண்டுகொள்வார் இன்றி கரைந்து விடும்.

இப்போது அப்படி ஒரு வீடியோ, கால சூழல் கருதி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வைரலாக்குங்க என்று அந்த நபர் கேட்டுக் கொள்கிறார். ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த அவர் கோருவதால், இந்த வீடியோவின் பொது நோக்கிலான வேண்டுகோளை மனத்தில் கொண்டு பலரும் சமூக வெளியில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த வீடியோவில்… கேரளாவுல ஒரு பொண்ணு கண்ணு அடிக்கிறத எல்லாம் வைரலாக்குறீங்க… ஒரு பையன் சூசைட் பண்ணிக்கிறான் அதை எல்லாம் வைரலாக்குறீங்க… இந்த வீடியோவை வைரலாக்குங்க சார்… இதை பாத்துட்டு ஒவ்வொரு இளைஞரும் துடிக்கணும் சார்… செத்த என் நண்பன் குட்ம்பத்துக்கு தனி ஆளு இல்ல. ஏழு கோடி மக்கள் துணையா இருக்காங்கன்னு காட்டணும் சார்…
இந்த வீடியோவ பாக்குறவங்க… ப்ளீஸ் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி யார் எல்லாம் வீடியோவ போஸ்ட் பண்றீங்களோ… அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்… என்று முடிக்கிறார் வீடியோவை!

என்ன நீங்களும் ஷேர் பண்ண தொடங்கிட்டீங்களா? அப்படின்னா உங்களுக்கு நாம் வைக்கிறோம் ஒரு ராயல் சல்யூட்! @DhinasariNews

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.