தொடரும் அவலம்..! கணவர் முத்தலாக் சொன்ன அதே நாளில்… துப்பாக்கி முனையில் மாமனாரால் 25 வயது பெண் பலாத்காரம்!

Published:

muslim woman triple talaq - 2026
Photo Credit: People

25 வயதான ஒரு முஸ்லீம் பெண் தனது கணவரால் உடனடியாக முத் தலாக் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது! பின்னர் அதே நாளில் துப்பாக்கி முனையில் அவரது மாமனாரால் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் சோபங்கி காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது.

அந்தப் பெண் காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு போன் காலில் அழைப்பு விடுத்தார். இதை அடுத்து அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நவம்பர் 22 ஆம் தேதி தனது கணவர் முத்தலாக் அறிவித்ததாகவும், அதே இரவின் நடுப்பகுதியில் தனது மாமனார் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இந்தப் பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இருப்பினும், பிவாடி துணை கண்காணிப்பாளர் கும்வாட், கூறுகையில், பிவாடி போலீசார் இப்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மற்றும் முத்தலாக் சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்கார வழக்கைப் பதிவு செய்துள்ளனர்! இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. மீட்கப் பட்ட பெண், மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார். அதன் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றோம் என்றார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img