வணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை

சற்றுமுன் சென்னை வணிகம்

income tax raid - 2026ஜோலார்பேட்டையில் வணிகவரிதுறை அமைச்சர் வீரமணி வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ளது தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணியின் வீடு.

இங்கே, அவரது வீடு மற்றும் அவரது மனைவி பத்மாவின் வீடு, சொந்தமான திருமண மண்டபம், வீரமணியின் உதவியாளர் சீனிவாசன், பணியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற் கொண்டனர்.

பல மணி நேரம் நடந்து வரும் இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.