என்டிஆர் பிறந்த நாள் அன்று அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த லட்சுமி பார்வதி வருத்தத்துடன் திரும்பிச் சென்றார்! ஏற்பாடுகள் சரியில்லை என்று சந்திரபாபு நாயுடுவை குறை கூறினர்!
இது குறித்து லட்சுமி பார்வதி கூறிய போது, “என்டிஆர் சமாதியை அலங்கரிக்க வேண்டிய பொறுப்பு சந்திரபாபு நாயுடு உடையதே. மகாநாடு நடத்துவதைக் கூட நிறுத்திவிட்டார். சமாதி அலங்கரிப்பதையும் ஏன் நிறுத்திவிட்டார்?
ஆட்சி போனாலும் மாப்பிள்ளையாக இது அவருடைய பொறுப்பு தானே! கட்சியையும் அரசாட்சியையும் கையகப்படுத்திக் கொண்டு நன்றாகத்தானே சம்பாதித்தார்!
ஒரு பத்து லட்சம் செலவு செய்து சமாதியை அலங்கரிக்க கூடாதா? பேனர் கூட வைக்க வில்லையே!” என்று மிகவும் கோபமாக விமர்சித்தார் லட்சுமி பார்வதி. மேலும், சந்திரபாபு நாயுடுவைத் தோற்கடித்து, அவர் செய்த கர்மங்களுக்காக என்டிஆர் தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார்” என்றார்.
அவருடைய ஆத்மா தற்போது சந்தோஷமாக இருக்கும் என்று கூறிய லட்சுமி பார்வதி, சந்திரபாபு செய்த பாவம் தவறுகள் இவற்றுக்கு நல்ல தண்டனை கிடைத்துள்ளது என்று குமுறுக் கொண்டு கொட்டித் தீர்த்தார்!
இன்னும் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு ஜெகன்தான் முதலமைச்சராக இருப்பார். என்டிஆர்., ஒய்எஸ்ஆர்., ஆகியோரின் ஆசீர்வாதத்தால், கடந்த தனது ஆட்சியில் செய்த தவறுகாளால்தான் ஜெகன் முதலமைச்சரானார் என்று கோபத்துடன் கூறினார்.
லட்சுமி பார்வதி பேசிக் கொண்டிருந்த போதே சந்திரபாபு நாயுடுவின் விசுவாசிகள் அவரைப் பேசவிடாமல் கூச்சலிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே தனது பேச்சை முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்!
1993ல் என்.டி.ராமாராவ் லட்சுமி பார்வதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். என்.டி.ஆர்., மறைந்த பின்னர் கட்சி லட்சுமிபார்வதி கைக்கு வந்தது. அவரிடம் இருந்து கட்சியைக் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டு பின்னாளில் ஆட்சிக்கு வந்தவர் சந்திரபாபு நாயுடு.




