உம்மாச்சி’ என்பது உமா மகேஸ்வரனே!
(
குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழங்காலத்திலிருந்து உமாதேவி யுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரியவந்தது..” என்று குறிப்பிடுகிறார், காஞ்சி மகா ஸ்வாமிகள்)
நன்றி-சக்தி விகடன்.
குழந்தைகள் ஸ்வாமியை ‘உம்மாச்சி’ என்றே சொல்லும். ‘உம்மாச்சி’ என்ற குழந்தை மொழிக்கு ‘ஸ்வாமி’ என்று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருபவர்கள்கூட, ‘உம்மாச்சித் தாத்தாவை நமஸ்காரம் செய்’ என்று அவற்றிடம் சொல்வது உண்டு’’ என்று ஒருமுறை அருளியிருக் கிறார் மகா பெரியவா.
‘இதென்ன உம்மாச்சி? இதன் சரியான மூலம் என்ன?’ என்று ஒருமுறை யோசித்துக் கொண்டிருந் தாராம் மகா பெரியவா.
அப்போது திருச்சி மலைக்கோட்டையில் மடம் முகாமிட்டிருந்த நேரம். அங்கே உள்ள கோயில் ஸ்ரீபாதம் தாங்கிகளில், திருநல்லத்திலிருந்து (கோனேரிராஜபுரம்) வந்தவர்களும் இருந்திருக் கிறார்கள்.
அவர்களில் ஒருவரை இன்னொருவர் ‘உம்மாச்சு’ என்று கூப்பிடுவதைக் கேட்டிருக்கிறார். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேசுவரன் என்பது. பெரியவாளுக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்துவிட்டது! உம்மாச்சு, உம்மாச்சி எல்லாம் உமாமகேசனைக் குறிப்பவையே என்று தெரிந்துகொண்டாராம்.
“ஆக, குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழங்காலத்திலிருந்து உமாதேவி யுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரியவந்தது..” என்று குறிப்பிடுகிறார், காஞ்சி மகா ஸ்வாமிகள்.



