தமிழகத்தில் நான்காவது அணி உதயம்! எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க!

அடடே... அப்படியா? நகைச்சுவை

deepa madhavan - 2026

தமிழகத்தில் நான்காவது அணி உதயமாகிறது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் இறுதி செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மெகா கூட்டணி என இரு அணிகள் தங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றன.

திமுக., தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைந்திருப்பதாக அந்த அணியும், அதிமுக., தலைமயில் ஒரு மெகா கூட்டணி அமைந்திருப்பதாக அதிமுக., பாமக.,வும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது அணிக்கான முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறார் நல்லவர்.

மக்கள் நீதி மய்யம் இப்போது மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த அணியில் டிடிவி தினகரன் கைகோப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தினகரன் தலைமையில் ஒரு அணி உருவாகும் என்று சில அனுமானங்கள் உலவும் நிலையில், நான்காவது அணி இது தான் என்று சுட்டிக் காட்டுகிறார்கள் சமூகத் தளங்களில்!

அதன்படி, தமிழகத்தில் நான்காவது கூட்டணி உறுதியாகியுள்ளது. .

மாதவன் மற்றும் தீபா கூட்டணி கையெழுத்தானது!

எனக்கு 20 உனக்கு 18 என 38 இடங்களை இருவரும் பகிர்ந்து கொள்ள, அண்ணா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின்
டிரைவர்க்கு 2 இடங்கள் ஒதுக்கப் பட்டிருப்பதாகக் கூறப் படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.