elephant 4 - 2026

இறந்த குட்டியை கண்ணீருடன் தூக்கி சென்ற தாய் யானை!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
elephant 4 - 2026

மேற்கு வங்கத்தின் ஜல்பைங்குரி என்ற பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் யானைக்குட்டி ஒன்று மர்மமாக இறந்து கிடந்தது.

ஏன் இறந்தது என்ற விவரம் தெரியாதை நிலையில் அது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வனத்துறை வருவதற்கு முன்பே குட்டியைத் தேடி தாய் யானை வந்தது. தேயிலைத்தோட்டத்தில் தன் குட்டி சடலமாக கிடப்பதைப் பார்த்த தாய் யானை கண்ணீர் வடித்தபடியே தன் துதிக்கையால் தூக்கிச் சென்றது.

குட்டியைத் தூக்கிக்கொண்டே பல கிமீ தூரங்களை கடந்து சென்றது யானை. பின்னர் அந்த தாய் யானை தன் கூட்டத்துக்குள் கலந்தது. கிட்டத்தட்ட 30-35 யானைகள் அந்தக்கூட்டத்தில் இருந்தது.

தன் குட்டிக்காக கிட்டத்தட்ட 8 கிமீ தாண்டி தேயிலைத் தோட்டத்துக்கு யானை வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குட்டி இறந்துள்ளதால் தாய் யானை கோபமாக இருக்கலாம் என்பதாலும், பெரிய யானைக் கூட்டம் என்பதாலும் வனத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.