செய்முறை தேர்விற்கு பின் +2 மாணவர்களுக்கு விடுமுறையா?

கல்வி சற்றுமுன் தமிழகம்
school
school

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு முடிந்த பிறகு தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அதனைப் போலவே மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத் தேர்தல் நெருங்கிகொண்டு இருப்பதால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிந்த பிறகு தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தேர்தலையொட்டி பள்ளிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுவதால் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 16 முதல் 23 வரை செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. அதன்பிறகு தொடர்ச்சியாக 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.