அடேங்கப்பா… தக்காளி விலை கிலோ 250 ரூபா..!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்

Tomatoes - 2026

விண்ணை முட்டும் விலையாக, என்றும் இல்லாத அளவில், பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டிருந்தன. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு தினமும் 3 ஆயிரம் டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை விட அதிக அளவில் இந்தியாவிடம் இருந்தே பாகிஸ்தான் குறைந்த விலையில் தக்காளியைப் பெற்று வந்தது. தற்போது காய்கறி ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தற்போது இந்திய காய்கறிகளின் வரத்து நின்று போனதால், பாகிஸ்தானில் பச்சை மிளகாய் கிலோ ரூ. 160-க்கும், சிவப்பு மிளகாய் ரூ. 300-க்கும், இஞ்சி ரூ. 150-க்கும், உருளைக்கிழங்கு ரூ. 70-க்கும், வெங்காயம் ரூ. 90-க்கும், கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ. 110-க்கும் விற்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.