தனித்திருந்த பெண்.. வீட்டிற்குள் நுழைந்து கட்டியணைத்த கணவனின் நண்பன்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம்
sexual harassment - 2026

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், தவறாக நடக்க முயன்றவரை, போலீசார் கைது செய்தனர்.சைதாப்பேட்டை, ஆலந்துார் சாலையில், 32 வயது பெண், கணவருடன் வசித்து வருகிறார்.

கணவரின் நண்பன், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், 37.கடந்த, 13ம் தேதி இரவு, கணவர் இல்லாத நேரத்தில், வீட்டில் நுழைந்த கண்ணன், பெண்ணை கட்டிப்பிடித்து, தவறாக நடக்க முயன்றுள்ளார்.

பெண் சத்தம் போட்டதும், கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடினார். சைதாப்பேட்டை போலீசார், நேற்று, கண்ணனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.