பாறைக்கு இடையில் குதித்து தப்பித்தோம்: காட்டுத்தீயில் சிக்கிய மாணவி பேட்டி

சற்றுமுன் தமிழகம்

commondo - 2026

தேனி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை உடனடியாக மீட்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார்

உயிர் பிழைத்த மாணவி பேட்டி:

இந்த நிலையில் காட்டுத்தீயில் இருந்து சிக்கி உயிர் பிழைத்த மாணவி ஒருவர் கூறியதாவது: சென்னையிலிருந்து மொத்தமாக 24பேர் மலையேற்றம் வந்தோம். அவர்களில் இரண்டு பேர் ஆண்கள். மற்ற 24 பேரும் பெண்கள்தான். இதுதவிர மற்றொரு குழுவினரும் வந்திருந்தார்கள். மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு கிளம்பலாம் என நினைத்தோம். அப்போது திடீரென புகை வந்தது. நாங்கள் எதிர்பார்க்காத போதே அதிகப்படியான புகை எங்களது கால் வரை வந்தது. என்ன செய்வதேன்று தெரியாமல் ஆளுக்கொரு பக்கம் ஓடினோம். நாங்கள் தப்பிக்கலாம் என நினைத்தபோது எந்த பக்கத்திற்கும் வழி இல்லாமல் தீ முழுவதும் எங்களை சூழ்ந்து இருந்தது. ஒரு சிலர் மட்டும் பாறைக்கு இடையில் குதித்து தப்பித்தோம். அவர்களுக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால் மற்றவர்கள் ஒவ்வொரு பக்கமாக ஓடினார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை’ என்று கண்ணீருடன் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.