ஸ்டாலின் பிறந்த நாள்! அன்பழகன் வீட்டில் 10 சவரன் நகை கொள்ளை!

அடடே... அப்படியா? துணுக்குகள் நகைச்சுவை

stalin tv - 2026

இன்று திமுக., தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டு வருகிறது. திமுக.,வினர் உற்சாகமாக தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

காரணம், மு.க. ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னர் நடைபெறும் முதல் பிறந்த நாள் விழா என்பதால், சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

இதனிடையே இன்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வீட்டில் 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அவரது உதவியாளர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் பணிப்பெண் நளினி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இரண்டையும் முடிச்சுப் போட்டு, அதிமுக.,வினர், டிவிட்டர் பதிவுகளில் கேலி செய்து வருகின்றனர்.  உதாரணத்துக்கு…  முன்னாள் அதிமுக., ஆதரவளராகவும் தற்போது தினகரன் ஆதரவாளராகவும் இருக்கும் கிஷோர் கே ஸ்வாமி பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவு:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.