மறக்கமுடியாத அனுபவம்: பியர் க்ரில்ஸுக்கு நன்றி தெரிவித்த ரஜினி!

இந்தியா சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
rajini pear grills - 2026

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி படப்பிடிப்பு எனக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாக இருந்தது. அதற்காக பியர் கிரில்ஸ்ஸுக்கு எனது நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

டிஸ்கவரி டிவி.,யில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சி. உலக அளவில் பிரபலமான இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் பின் இந்த நிகழ்ச்சி இந்திய அளவில் மிகப் பிரபலமானது.

இந்நிலையில், மோடிக்குப் பின்னர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு என்ற டிவி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கர்நாடக மாநில வனப்பகுதியில் நடைபெற்றது. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை மறக்க முடியாத சிறந்த அனுபவமாக்கித் தந்தமைக்காக பியர் கிரில்சுக்கும், டிஸ்கவரி சேனலுக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

டிஸ்கவரி சேனலும் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளது. ரஜினி பங்கேற்றுள்ள சிறப்பு எபிசோடிற்கான கவுண்டன் தொடங்கியுள்ளதாகவும் டிஸ்கவரி சேனல் நிர்வாகம், ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.