இம்ரான் கானுக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்க வேண்டும்! பாகிஸ்தானியர்களின் கோரிக்கை!

உரத்த சிந்தனை உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

15 June10 imran khan - 2026

இம்ரான் கானுக்கு நோபல் அமைதி பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள் பாகிஸ்தானியர்கள்

சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் ஆன்லைன் பெட்டிஷன் மூலம் பாகிஸ்தானில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன! ட்விட்டரிலும் nobel peace prize for இம்ரான் கான்  #NobelPeacePrizeForImranKhan. என்ற ஹேஸ்டேக் பிரபலப் படுத்தி வருகிறார்கள்

பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் இம்ரான் கானுக்கு அமைதி விருது வழங்க வேண்டும் நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவித்த பிறகு இத்தகைய கோரிக்கைகளை பாகிஸ்தானியர்கள் எழுப்பி வருகின்றனர்

இது குறித்து பாகிஸ்தானின் செய்தித்துறை அமைச்சர் சவுத்ரி சனிக்கிழமை நேற்று கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன அவர் இம்ரான் கானுக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்

இதற்காக பாகிஸ்தானியர்கள் ஆன்லைன் பெட்டிஷன் மூலம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் கையெழுத்துக்களை அனுப்பியுள்ளனர் மேலும் ட்விட்டரிலும் hashtag பதிந்து பரப்பி வருகின்றனர்

இது உலக அளவில் இரண்டாகவும் தொடங்கியது இரு தினங்களுக்கு முன் அபிநந்தன் விடுவித்த கையுடன் அதே நாளில் இந்த ஆன்லைன் பெட்டிஷனை பாகிஸ்தானியர்கள் தொடங்கிவிட்டனர்

ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்! இந்த விவகாரம் தொடங்கப்பட்டதே தற்போது புல்வாமா தாக்குதல் மூலம் தான்! இந்திய நாட்டின் 40க்கும் மேற்பட்ட crpf வீரர்களை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் மூலம் உயிரிழக்க செய்த அந்த நிகழ்வு தான் இதற்கான ஆரம்பம் என்று கூறுகின்றனர்

பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருந்தாலும் கூட அதன் மீது பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை! ஆனால் இப்போதும் அவர்கள் இந்தியா ஜெய்ஷ்-இ-முகமது தான் இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதையும் மசூத் அசார் இதில் தொடர்பு கொண்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்களையும் அனுப்பி வைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்போம் என்று கூறி வருகிறது

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் நடந்த 12 தினங்கள் கழித்து பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானங்கள் துள்ளிய தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தன இதை முன்னிட்டு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா மீது பாகிஸ்தான் திடீரென இராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்தின பொதுமக்கள் மீதும் குண்டுகளை வீசி சென்றனர்

இருப்பினும் பாகிஸ்தானியர்கள் தங்களிடம் பிடிபட்ட அபிநந்தன் என்ற இந்திய விமானியை விடுவிப்பதற்காக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானுக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது நகைப்புக்குரியது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்தியர்கள்.

அதே நேரம், பாரதப் பிரதமர் மோடி சியோல் அமைதி விருது பெற்றது, அவர்கள் கண்ணுக்கு பொறாமையாக உள்ளது. அதனால் அவ்வாறு தங்கள் நாட்டு பிரதமரும் அமைதி விருது பெற வேண்டும் என்று கோருகின்றனர் என கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர் இந்தியர்கள் சிலர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.