ரஃபேல் இந்நேரம் இருந்திருந்தால்..? நிலைமையே வேறாக இருந்திருக்கும்: மோடி

Published:

 

modi indiatodayconclave - 2026புதுதில்லி: இண்டியா டுடே கான்க்ளேவ் 2019 என்ற டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரஃபேல் மட்டும் இந்நேரம் இருந்திருந்தால், நிலைமையே வேறாக இருந்திருக்கும்! ரஃபேல் போர் விமானம் நம்மிடம் இல்லாததால் ஏற்பட்ட நிலைமையை தற்போது எதிர்க்கட்சிகள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று பேசினார்.

பிரதமர் மோடியை அதிகம் கேலியும் கிண்டலும் செய்து, எதிர்மறை விமர்சனம் மட்டுமே செய்து வரும் ராஜ்தீப் சர்தேசாயின் இடத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி என்று நெட்டிசன்கள் இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டதை பகிர்ந்து வந்தார்கள்.

பரப்பான சூழலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை தான் பிடித்துவைத்த மூன்று நாட்களுக்குள்ளாகவே பாகிஸ்தான் விடுவித்ததன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கை அனைவரும் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.

ரஃபேல் போர் விமானம் நம்மிடம் இல்லாததால் ஏற்பட்ட நிலைமையையும் தற்போது அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள். தற்போதுள்ள சூழலில் ரபேல் விமானம் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் இந்த நிகழ்வின் விளைவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

ரஃபேல் விமான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் செய்த அரசியலால் தான் நமக்கு இந்த அளவுக்கு பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் பின்னால் உலக நாடுகள் எல்லாம் ஓர் அணியில் திரண்டு கொண்டிருந்த நிலையில், நம் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட தாக்குதல் குறித்த கேள்விகளையும், சந்தேகங்களையும் முன் வைத்திருப்பது வேதனை அளிக்கிறது.

இந்தியர்கள் எல்லோரும் ஒரே குரலில் ரஃபேல் விமானம் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில், ரஃபேல் மீதான எதிர்க்கட்சிகளின் சுயநல அரசியல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நீங்கள் மோடியை எதிர் அரசியல் செய்யுங்கள்; மோடி தீட்டிய அரசுத் திட்டங்கள் தரும் பலன்கள் குறித்து குறை கூறுங்கள்; ஆனால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனை தரக்கூடியதுதான் என்றார் பிரதமர் மோடி.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img