சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி!

சற்றுமுன் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

chidambaram 1 - 2026

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் சாதனை நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. கின்னஸ் உலக சாதனைக்காக நடந்த இந்த நிகழ்ச்சியை பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். ஒரே நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் நடனம் ஆடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழாவில் உலக சாதனைக்காக 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடினர். இந்த நாட்டியாஞ்சலி விழா கின்னஸ் சாதனையாக இடம்பிடித்தது.

சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெறும். இந்த வருடம், பத்தாயிரம் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று, ஒரேநேரத்தில் நாட்டியமாடி நடராஜருக்கு அஞ்சலி செலுத்தும் விழா இன்று காலை நடைபெற்றது. கின்னஸ் சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்த நாட்டியாஞ்சலியில், நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் பங்கேற்றனர்.

ஆயிரங்கால் மண்டபம் மற்றும் சுற்றுப் பிராகாரத்தில் 10 ஆயிரம் பேரும் திரண்டு ஒரே நேரத்தில் நாட்டியம் ஆடினர். 20 நிமிடங்களுக்கும் மேலாக இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைப் பதிவு செய்வதற்காக லண்டனைச் சேர்ந்த கின்னஸ் குழுவினர் வந்திருந்தனர். விழா முடிந்த பின்னர், கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவை விழாக் குழுவினரிடம் வழங்கப் பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.