கரூர்: வங்கியில் கடனை திருப்பிச் செலுத்தாததால், திமுக.,வைச் சேர்ந்த கரூர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியின் 173 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
கரூர் மாயனூரில் பாலீத்தின் பைகள் தயாரிக்கும் தொழில் செய்து வரும் கேசி பழனிசாமி, தன் பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெற்றுள்ளார். கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு வங்கிகளில் இருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்த 60 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அவகாசம் கொடுக்கப் பட்ட நிலையிலும் குறித்த தேதியில் கடனை திருப்பி செலுத்தாததால் அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் முடக்கப்படுவதாக பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் அறிவித்துள்ளன. இந்தத் தகவல் செய்தித்தாள்களில் வெளியிடப்படும் அறிவிப்பு மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது.





ஆஹா நலà¯à®² விஷயமà¯.இதே மாதிரி அனைதà¯à®¤à¯ வஙà¯à®•ிகளà¯à®®à¯ செயல௠படà¯à®Ÿà¯ இநà¯à®¤à®¿à®¯à®¾ வில௠வஙà¯à®•ிகள௠நலà¯à®² நிலைகà¯à®•௠வரà¯à®®à¯ என எதிரà¯à®ªà®¾à®°à¯à®•à¯à®•பà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯