யாருமே இல்லாத கடைல எதுக்குடா டீ ஆத்துறீங்க..?!

அடடே... அப்படியா? சற்றுமுன் நெல்லை

kanimozhi with team - 2026

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். அவரிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்திய புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்கட்சி ஜனநாயகம் என்பது இதுதான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போட்டியிட்டு, அதற்கு நேர்காணல் வேறு நடத்துகிறார்களா என்று சிலர் கேள்விகளை முன்வைக்கின்றனர்.

அதற்கு பதிலளித்த சிலர், இதே போல் தான் மு.கருணாநிதியும் கூட ஸ்டாலினை நேர்காணல் செய்திருக்கிறார் என்று திமுக., ஜனநாயகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.

dmk stalin - 2026

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி மட்டுமே விருப்ப மனு செய்த நிலையில் அவரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இதனால் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்த கனிமொழி அத் தொகுதியில் தேர்தலுக்கான ஆரம்பக் கட்ட பணிகளையும் ஏற்கனவே முடுக்கி விட்டுள்ளார்.

இதனால் திமுகவில் விருப்ப மனு பெற்ற போது தூத்துக்குடி தொகுதியில் திமுகவில் கனிமொழியைத் தவிர வேறு யாரும் விருப்ப மனு செய்யவில்லை. இந்நிலையில் நேற்று தூத்துக்குடி தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய நேர்காணல் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணலில் ஆஜரான கனிமொழி தொகுதியில் தமக்குள்ள வெற்றி வாய்ப்புகள் குறித்து எடுத்துக் கூறினார்.

தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் களமிறங்க திட்டமிட்டுள்ளதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது தூத்துக்குடி. இதனால் பிரச்சாரத்திலும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் இன்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பேசிய பாஜக., தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், `தமிழ் மொழியையா வளர்த்தீர்கள்? கனிமொழியைத்தானே வளர்த்தீர்கள்!’ என்று காரசாரமாகத் துவக்கியுள்ளார்.

ஆக.. ஆக… தூத்துக்குடியில் சூடு பிடிக்கத் தொடங்கிட்டுது..!

1 thought on “யாருமே இல்லாத கடைல எதுக்குடா டீ ஆத்துறீங்க..?!”

  1. குடும்ப அரசியலின் ஒளி தூத்துக்குடியில் ?
    மக்களால் தேர்ந்தெடுக்கப்படமாட்டார் என்பதால் கனிமொழிக்கு வேட்டு வைக்க ஸ்டாலினின் தந்திரமோ ? கொல்லைப்புறமாக செல்லும் வழியையும் வை.கோ.அடைத்துவிட்டாரே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.