
விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரத்தில் தனது இரண்டு மகள்களை கொன்று தாயும் தற்கொலை – ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் அருகே பி. குமாரலிங்கபுரத்தில் சரவணக்குமார் – பெத்தம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாண்டிச்செல்வி(6) வயது மற்றும் கார்த்தியாயினி இரண்டரைவயது இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர்.

சரவணக்குமார் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இவரது மனைவி பெத்தம்மாள் மன நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் சரவணக்குமார் கொத்தனார் வேலைக்கு சென்றுவிட்டு உணவு அருந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்பொழுது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த சரவண குமார் வீட்டீன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பெத்தம்மாள் மற்றும் பாண்டி செல்வி(6) மற்றும் கார்த்தியாயினி (2) இரண்டு மகள்கள் ஆகிய மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்ததைப் பார்த்த சரவணகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அருகில் இருந்த உறவினர்கள் ஆமத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆமத்தூர் காவல் துறையினர் தாய் மற்றும் குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தைகளை கொன்று விட்டு தாய் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்





