கோவா புதிய முதல்வராக பதவி ஏற்கிறார் பிரமோத் சாவந்த்!

இந்தியா சற்றுமுன்

pramod savanth goa - 2026

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் இன்று இரவு 11 மணிக்கு பதவி ஏற்கிறார்

கோவாவின் 11வது முதலமைச்சராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். அவர் இன்று இரவு பதவி ஏற்பார் என்று கூறப் பட்டுள்ளது.

பாஜக.,வுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏக்கள் துணை முதல்வராகப் பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைவை அடுத்து அடுத்த முதல்வராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் பெரும் இழுபறி நீடித்தது. இந்நிலையில், பிரமோத் சாவந்த் முதல்வராக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.