இன்று நடக்கிறது இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை இடையேயான சந்திப்பு

Published:

06 Sep05 Forigen minister - 2026

புதுடெல்லி,இந்தியா, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையே இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோரிடையே இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதில் இருநாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் இவ்விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related articles

Recent articles

spot_img