மோடி மீண்டும் பிரதமர் ஆக… கமலாலயத்தில் ஹோமம்!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

ila ganesan - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோதி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்று சென்னையில் உள்ள பாஜக., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஹோமம், சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.

இன்று பங்குனி உத்திரம் திருநாள் என்பதால், காலை பாஜக., அலுவலகத்தில் ஹோமம், பூஜை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.

இது குறித்து தகவல் வெளியிட்டிருந்த பாஜக., தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்,  தேசத்தை எதிர்நோக்கியுள்ள சவால்களைக் களைய வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கி நவக்கிரக, சண்டி ஹோமங்கள் உடன் இன்று காலை கமலாலயத்தில் பூஜைகள் நடைபெற்றன என்று கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.