வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கான சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனையைத் தொடங்கினர். சென்னை, கோவை, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் தனித்தனி குழுக்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர கர்நாடக மாநிலத்தில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது. மொத்தம் 70 இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



