வாக்குறுதியை கேட்டு வாக்குப் போடு!

உரத்த சிந்தனை கவிதைகள் லைஃப் ஸ்டைல்

voting 1 - 2026

வருவாங்க வருவாங்க ஓட்டு கேட்க வருவாங்க
தருவாங்க தருவாங்க காசு பணம் தருவாங்க

ஐந்தாண்டு பாத்துக்கோங்க ஒங்க வாழ்வ நெனைச்சுக்கோங்க
அப்றம் அசைச்சா அசையாது கவுத்தா கவுழாது

நேத்து வந்த மன்னாரு என்ன செஞ்சாரு
இன்று வந்த மன்னாரு என்ன சொன்னாரு

ஐந்தாண்டு காலத்தில ஐயோ சாமி விலையேறும்
பதவியிருக்கும் அதிகாரத்தில
பலகோடி சுருட்டி ஏப்பம்

வூடு வூடா வருவாங்க படியேறி கேப்பாங்க
கூரவூடு ஓட்டுவூடு தாழ்வாரத்த பாத்துக்கோங்க

ஒங்களில் ஒருவன் நான்
குடும்பத்தில் ஒருவன் நான்

தொகுதியில் வாழ்வேன் நான்
தூங்காது உழைப்பேன் நான்

அள்ளிக் கொட்டும் வார்த்தையிலே
எடுத்துப் பார்த்தா ஒண்ணுமில்லே

ஏமாறாதே ஏமாறாதே

சிந்தித்தால் ஐந்தாண்டும் புதுசு
விலை போனால் ஐந்தாண்டும் பழசு!

  • கவிஞர் கோபால்தாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.