கட்சிகள் சுற்றும் வாலிபன்! 5 கட்சி 7 சின்னத்தில் போட்டியிட்ட சாதனையாளர்… யார் தெரியுமா?

Published:

vajpayee karunanidhi - 2026

சிலர் ஒரே கட்சியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருவார்கள். சிலர் பதவிக்காக கட்சி மாறுவார்கள். சிலர் கொள்கைக்காக கட்சி மாறுவார்கள்.

இந்த நபரோ… தன் வாழ்நாளில் 5 கட்சி, 7 சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட சாதனையாளர் நபர் யார் தெரியுமா?

கட்சி தாவலுக்கு தமிழகத்திலேயே முன்னுதாரணமாக இருப்பவர் இவர்தான். அவர் பெயர், திருநாவுக்கரசர். காங்கிரஸில் தலைவராக இருந்தார். இப்போது ஒரு வேட்பாளர் ஆகியிருக்கிறார்.

05 May15 thirunavu - 2026

திருநாவுக்கரசர் போட்டியிட்ட தேர்தல்களும் சின்னமும….

1977 – அறந்தாங்கி – இரட்டை இலை

1980- அறந்தாங்கி – இரட்டை இலை

1984- எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்து – சேவல்

1989 – அறந்தாங்கியில் சுயேச்சையாக – குடை

1991 – அறந்தாங்கியில் சுயேச்சையாக – மாம்பழம் (திமுகவுடன் கூட்டணி)

1996 – அதிமுகவில் இணைந்து அறந்தாங்கியில் போட்டி – இரட்டை இலை

1999 – லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக புதுக்கோட்டையில் வெற்றி – மோதிரம் (திமுகவுடன் கூட்டணி வைத்து)

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

2009 – பாஜக வேட்பாளராக ராமநாதபுரத்தில் – தாமரை

தற்போது 2019 – கை சின்னத்தில் திருச்சியில் போட்டி.

Related articles

Recent articles

spot_img